திருவள்ளுவர் சிலை என்பது திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு குமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும். இந்த சிலை அமைக்கும் பணி 1990, செப்டம்பர் 6 இல் தொடங்கப்பட்டு 2000, ஜனவரி 1 அம தேதியன்று திறக்கப்பட்டது.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பார்கள். இந்த நிலையில் ரசாயன கலவை பூச்சு காரணமாக கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை பார்வையிட, மார்ச் 6 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.