LPG, வர்த்தக சிலிண்டர்களின் விலையில் உயர்வு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 8 மாதங்களுக்கு பிறகு மானியம் இல்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து உள்ளது. முன்பாக வீட்டு உபயோக LPG சிலிண்டர் விலையானது ஜூலை-6 2022 முதல் ஒரே நிலையில் தான் இருந்திருக்கிறது. அதே நேரம் வர்த்தக சிலிண்டர்களின் நுகர்வோர் பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளனர். ஏனென்றால் வர்த்தக சிலிண்டர் விலையானது ரூபாய்.350 வரை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மார்ச் 1ம் தேதி என்பதால் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலையானது சென்னையில் ரூபாய்.50 அதிகரித்து 1118.50க்கு விற்பனையாகிறது.

இந்நிலையில் சிலிண்டர் விலை உயர்வுக்கு விஜயகாந்த் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். சிலிண்டர் விலை உயர்வு அடுப்பு எரிக்கும் பெண்களுக்கு வயிறு எரிய செய்திருக்கிறது. சிலிண்டருக்கு ரூபாய் 100 மானியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக இதுவரை நிறைவேற்றவில்லை. ஏழைகள், நடுத்தர மக்களைப் பற்றி சிந்திக்காமல் செயல்படும் மத்திய மாநில அரசுகளுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.