திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பேரூராட்சியில் நகராட்சி என்பவர் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று திசையன்விளை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்க்கும் கணவரை இழந்த பெண் குப்பை கிடங்கில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணுக்கு நவராஜ் பாலியல் தொந்தரவு அளித்து தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் நவராஜை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் நவராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் திசையன்விளை பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.