DMK சார்பில் நடைபெற்று வரும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குஜராத்தில் சென்ற வருடம் நம்முடைய ஒன்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஒரு மருத்துவக் கல்லூரியை திறப்பதற்கான நிகழ்ச்சியில் போய் அவர் உரையாற்றும் பொழுது சொல்லுகிறார்…..  நம்முடைய கனவு என பேசுறாரு.

குஜராத்தினுடைய ஒவ்வொரு  மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி துவங்க வேண்டும்.  அதுதான் அவருடைய கனவு என்று சென்ற வருடம் பேசுகிறார்.  ஆனால் இதையெல்லாம் 2006 ஆண்டிலே செய்து முடித்தவர் நம்முடைய முத்தமிழர் டாக்டர் கலைஞர் அவர்கள். அந்த அளவிற்கு மருத்துவ கட்டமைப்பை பார்த்து பார்த்து அழகாக செதுக்கியவர் நம்முடைய கலைஞர் அவர்கள். ஜனநாயகத்தின் மீது இருக்கின்ற நம்பிக்கையில் தான் இந்த கையெழுத்து நம்முடைய இளைஞரணி, மருத்துவரணி, மாணவரணி  3 அணிகளும் சேர்ந்து தொடங்கி இருக்கிறது.

நீட்  விலக்கு மசோதாவுக்கு  குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி  தமிழ்நாடு முழுக்க பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கக்கூடிய ஜனநாயக  இயக்கத்தை தொடங்கி இருக்கின்றோம். கழக நிர்வாகிகள், மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் கிளை கழகத்துடன் இணைந்து, இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்துங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்  தெரிவித்தார்.