தமிழகத்தின் பல்வேறு துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மே 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் வேளாண் அலுவலர் பணிக்கான போட்டி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.