தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான ஊழியர்களை தேர்வு மூலமாக டிஎன்பிஎஸ்சி தேர் பானையும் நியமித்து வருகின்றது. டிஎன்பிஎஸ்சி யின் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தகவல்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக வெளியிடப்படுகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு ஒன்றை டிஎன்பிஎஸ்சி செயலாளர் மூலமாக அறிக்கையாக தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ X கணக்கு “ TNPSC_Office ” என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இனிவரும் நாட்களில் தேர்வாணையம் வெளியிடப்படும் தேர்வு தொடர்பான அனைத்து தகவல்களும் இந்த கணக்கில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.