டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜூலை பருவத்தில் சேர வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வுக்கு அக்டோபர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் யாராவது ஒருவர் தமிழகத்தில் வசிக்க வேண்டும்.

அதனைப் போலவே விண்ணப்பதாரர்கள் 13 வயதை அடைந்தவராக இருக்க வேண்டும் எனவும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www. rimc. gov. in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், பூங்கா சாலை, சென்னை 600003 முகவரிக்கு அக்டோபர் 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.