தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு சுமார் 10,000 தொகுதி-4காலி பணியிடங்களுக்காக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் இ பி எஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் தற்போது 25 ஆயிரம் ஆக உயர்த்தி இருப்பதாக செய்திகள் வருகின்றன.

எனவே 2022 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வுக்காக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் இருந்து சுமார் 20000 தகுதி பெற்ற தேர்வர்களை ஆவது தேர்ந்தெடுத்து காலியாக உள்ள 20 ஆயிரம் பணியிடங்களை ஆவது நிரப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.