தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகும் வெயிலின் தாக்கம் குறையாததால் தற்போது ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள இலவச சீருடைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்ற வருகின்றன. பள்ளி திறக்கப்படும் நாளில் இந்த சீருடைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு மாணவருக்கு நான்கு செட் இலவச சீருடை வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.