ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு காரில் ஒரு குடும்பம் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் மொத்தம் 5 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில் அந்தக் கார் சிரோஹி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் டயர் வெடித்தால், கார் சாலையில் கவர்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அந்த கார் அதிவேகத்தில் சென்றபோது டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.