டெல்லியில் யமுனா கதர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு மின்கம்பத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென ஏறிவிட்டார். இதனை கண்ட அக்கம் பக்கம்தினர் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். மின்கம்பத்தில் ஏறிய நபர் நான் பிரதமர் மோடியிடம் பேசிய ஆக வேண்டும் அவரை நேரில் சந்தித்தால் தான் கீழே இறங்கி வருவேன் என்று கூறினார்.

இருப்பினும் தீயணைப்பு துறையினர் அந்த நபரை பத்திரமாக கீழே இறக்கினார்கள்‌. இதைத் தொடர்ந்து அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இது குறித்து அந்த நபரிடம் கேட்கும் போது அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி, முதல்வர் மற்றும் நீதிபதிகளிடம் பேச வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.