தலைநகர் டெல்லியில் ரோகிணி நகரில் பைக்கில் முகமூடி அணிந்தவாறு வந்த 2 நபர்கள் சாலையில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரிடம் திடீரென்று துப்பாக்கி முனையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பதறிபோன அப்பெண் ஓடிசென்று கடை ஒன்றின் தஞ்சமடைந்துள்ளார். அக்கடையில் இருந்த நபர் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, உடனே அவரை காப்பாற்ற வெளியில் ஓடி சென்றுள்ளார்.
இருப்பினும் முகமூடி கொள்ளையர்கள் கைகளில் துப்பாக்கியுடன் இருந்துள்ளனர். இதை பார்த்து மிரண்டுபோன அந்நபர் மீண்டும் கடைக்குள் ஓடுகிறார். அந்நபரை பார்த்ததும் முதலில் கொள்ளையர்கள் பின் வாங்கினாலும், பிறகு மீண்டும் கடை வாசலில் விழுந்து கிடந்த பெண்ணை நெருங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறிக்க முயன்றனர். இருந்தாலும் அவர்களை சங்கிலியை பறிக்க விடாமல் அப்பெண் கூச்சலிட்டு தடுத்து போராடியுள்ளார். எனினும் அம்முயற்சியில் பலனில்லை. தற்போது இந்த பரபரப்பு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.