சென்னை ஷெனாய் நகரில் திமுக சமூகவலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  பாஜகவை பொறுத்த வரைக்கும் அரசு எதிரிகள் மேல மட்டும் இல்ல… ஊடகவியலாளர்கள்… முற்போக்கு சிந்தனையாளர்கள்…. மானுட பற்றுமிக்கவர்கள் என  எல்லாரும் மேலேயும் அதிகார மிரட்டல்கள்,  அடக்குமுறைகள் செய்யுறவுங்களா இருக்காங்க.

அப்படிப்பட்ட சோசியல் வைரஸ்ஸை தான் நாம,  துணிவோடு எதிர்த்து நிற்கிறோம். மிசா, தடா, பேடா எல்லாம் பார்த்தாச்சு. மிரட்டல், உருட்டல் இதெல்லாம் நம்மளை ஒன்னும் பண்ணாது என்று தான்,  பொய்  மூட்டைகளையும் அவதூறுகளையும் கட்டவிந்து விடுறாங்க.ஹிட்லருக்காவது  ஒரே ஒரு கோயபல்ஸ் தான் இருந்தாரு. ஆனால் கோயபல்ஸ் எல்லாம் ஒன்று சேர்ந்து கட்சி ஆரம்பிச்சா எப்படி இருக்குமோ அப்படித்தான் அந்த கூட்டம் இருக்கு.

போற போக்குல யார் மேல வேணும்னாலும் அவதூற பரப்பலாம். என்ன பொய் வேணும்னாலும் சொல்லலாம். எதுக்கும் ஆதாரம் வேண்டாம். பொய் பேசுறோம் எண்கின்ற கூச்சமே வேணாம். அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் வாட்ஸ் அப் மெசேஜ் தான். அதுல என்ன வதந்திகளை என்றாலும் பரப்பலாம். அதை நம்புறதுக்கு ஆட்டுமந்தை கூட்டம் தயாரா இருக்குன்னு அடிச்சு விடுறாங்க. தம் புடிச்சி அவங்க ஊதுற பொய் பலூனை உண்மை என்கிற ஊசியை வைத்து ஈஸியா நாம உடச்சிடுவோம்னு எரிச்சல் அவங்களுக்கு இருக்கு என தெரிவித்தார்.