என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, செந்தில் பாலாஜியுடைய ஜாமீன் மறுக்கப்பட்டு இருக்கிறது. ஏன் மறுக்கப்பட்டிருக்கிறது ? மறுக்கப்பட்டதற்கு நீதிபதி காரணம் ‌சொல்றார்… 1, 2, 3, 4-ன்னு முதல் காரணம் என்ன சொல்றார்னா..? உனக்கு நெஞ்சுவலி எல்லாம் இருக்கிற மாதிரி தெரியலப்பா…  அங்கேயே  இரு.

அது நமக்கு தெரிஞ்சது தான். இரண்டாவது காரணம்…  உன்னுடைய தம்பி அசோக் மூன்று மாதமாக காவல்துறைக்கு சிக்காம தலைமுறைவாக இருக்கிறார். அதனால் உனக்கு ஜாமீன் கொடுக்க மாட்டேன். 3ஆவது  இன்கம் டேக்ஸ் அதிகாரி வந்த போதே ரவுடியை வச்சு அடிக்கிற குரூப்பு உனக்கு ஜாமீன் கொடுக்க மாட்டேன்.

இதெல்லாம் அவர் ஜட்ஜ்மெண்ட்ல எழுதி இருக்கிறார். நான்காவது காரணம் தான் மிக முக்கிய காரணம்…  குற்றவாளியாக இருந்து கொண்டு அமைச்சராக இருக்கின்றாய். வெளியே விட்டால் நீ….  இதைவிட முதலமைச்சரை பலார்னு யாரும் அடித்திருக்க முடியாது.  நீதிபதி அப்படி ஜட்ஜ்மெண்ட் எழுதி இருக்கிறாரு.

ஒரு குற்றவாளி மூன்றை மாதமாக புழல் சிறையில.. உங்களுடைய… என்னுடைய… அனைவருடைய…  வரி பணத்துல மாசம்,  மாசம் சம்பளம்.  TA என்ன இருக்கிறதோ, அதை வாங்கிட்டு இன்னைக்கு பெயில் வேணும்னு கேட்கிறாரு  தெரிவித்தார்.