அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  ADMK பதவியேற்று நான்கரை ஆண்டுகளில் கொரோனா மாதிரி எல்லாத்தையும் சந்திச்சவரு. மிகப்பெரிய வறட்சி… குடிநீர் பற்றாக்குறை….  புயல் என எத்தனை இடர்பாடுகளை சந்திக்க வேண்டியது இருந்தது. எடப்பாடியார் அத்தனையும் சந்தித்து,  மக்களை மனம் கோணாமல்…  மக்களுடைய எண்ணங்களுக்கு ஏற்ப ஆட்சி செய்தார்.

பொருளாதாரமே ஸ்தம்பிச்சு போச்சு. அரசாங்க கஜானாவை முடியாச்சு.  கஜானாவே இல்ல. தமிழகத்தில் ஆறு மாதம், ஏழு மாதம் எந்த வருமானமும் இல்லை. அரசாங்கத்திற்கு வருகின்ற வருவாய் எதுவுமில்லை. நாடோடி மன்னன்ல தலைவர் சொல்றாரு.. ”நீங்கள் மாளிகையில் இருந்து மக்களை பார்க்கிறீர்கள்…  நான் மக்களோடு இருந்து மாளிகையை பார்க்கிறேன்”. அந்த கேரக்டர்ல அண்ணன் எடப்பாடி நிக்குறாரு.

மக்களுடைய பிரச்சனையைக்கு தங்கத் தலைவன் எடப்பாடியார் நிற்கிறாருங்க. ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்தவர். அரசு பள்ளியில் படித்தவர். அரசு கல்லூரியில் படித்தவர். படிப்படியாக முன்னேறி அம்மாவினுடைய நம்பிக்கையை பெற்று…  அம்மாவினுடைய விசுவாசியாக… ஒரு தொண்டராக… சேலம் மாவட்டத்தில் வாழ்ந்து… படிப்படியாக வருகிறார்.  இன்னைக்கு முதலமைச்சர் பதவி கிடைச்சிருச்சு என தெரிவித்தார்.