ட்விட்டர் செயலி எலான் மஸ்கின் கட்டுப்பாட்டிற்கு சென்றதிலிருந்து ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ப்ளூ டிக் பெற கட்டணம் என்பதில் தொடங்கி ஒரு நாள் இத்தனை பதிவுகளைத் தான் பார்க்க முடியும் என்பது வரை போடப்பட்ட கட்டுப்பாடுகள் பயனர்களை அதிருப்தி அடையச் செய்தது. இதனிடையே மெட்டா நிறுவனம் twitter க்கு மாற்றாக புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக கூறி த்ரட்ஸ்-ஐ வெளியிட்டது.

இந்நிலையில் சென்சார் டவர் எனும் அளவீட்டு நிறுவனம் த்ரெட் செயலியின் பதிவிறக்கம் குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி செயலி அறிமுகப்படுத்தப்பட்ட அன்று ஒரு நாளில் 40 மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். சர்வதேச அளவில் இந்தியாவில் 28% மற்றும் பிரேசிலில் 16% பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.