கடந்த 2021 ஆம் ஆண்டு சூடான் நாட்டின் ஆட்சி ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு தலைவராக ராணுவ தளபதி ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் இருக்கிறார். அதேபோன்று துணைத் தலைவராக அடுத்த இடத்தில் துணை ராணுவ படை தளபதி ஜெனரல் முகமது இருக்கிறார். ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் சமீப காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் துப்பாக்கிச் சூடு குண்டு வீச்சு போன்ற  சம்பவங்கள் ராணுவ தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மோதலில் அவ்வபோது தற்காலிக ஒப்பந்தம் போடப்பட்டு பிரச்சினைகளும் நிறுத்தப்படும். இந்நிலையில் அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது அதன்படி தலைநகரான கார்டூமுக்கில் நடந்த வான்வழி தாக்குதலின் மூலம் 22 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த மாதம் நடந்த வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.