கைப்பந்து போட்டியில் தூத்துக்குடி துறைமுக அணி வெற்றி பெற்றது.

அகில இந்திய துறைமுக விளையாட்டு கழகம் சார்பாக அகில இந்திய துறைமுகங்களுக்கு இடையே கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மொத்தம் ஒன்பது பெருந்துறைமுகங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றது. இதில் இறுதிப் போட்டிக்கு தூத்துக்குடி வ.உ.சி துறைமுக அணியும் கொச்சி துறைமுகம் அணியும் மோதியது.

இதில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றதில் விழாவிற்கு தூத்துக்குடி வ.உ.சி துறைமுக ஆணையத் துணைத் தலைவர் தலைமை தாங்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். மேலும் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இந்த விழாவிற்கு தலைமை இயந்திர பொறியாளர் மற்றும் தலைவர் உள்ளிட்டோர் வரவேற்றுப் பேச அதிகாரிகள், தலைவர்கள் பொதுமக்கள் என பலர் பங்கேற்றார்கள்.