
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இந்நிலையில் அதிமுகவின் தலைமை பொறுப்பை கையில் எடுத்த பிறகு EPS-க்கு இது 8-வது தோல்வியாகும்.
2017 ஆம் வருடம் நடந்த ஆர்கே நகர் இடைத்தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2019 சட்டமன்ற இடைத்தேர்தல், அதனை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தல்களிலும் படுதோல்வி, 2021 சட்டமன்ற தேர்தல், 2021 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல், தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என தொடர்ந்து தோல்வியை தழுவியுள்ளார் இபிஎஸ்.