பொதுவாக கோடை காலம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தொடங்குவது தான் வழக்கம். ஆனால் வரலாற்றிலேயே இந்த ஆண்டுதான் வெப்பமான பிப்ரவரி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை 29.54 டிகிரியாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2016 ஆம் ஆண்டு வெப்பம் 29.48 டிகிரியாக பதிவானது. கடந்த 2006 ஆம் ஆண்டு 29.31 டிகிரி, 2017 ஆம் ஆண்டு 29.24 டிகிரி,2009 ஆம் ஆண்டு 29 புள்ளி 23 டிகிரி என வெப்பம் பதிவாகி இருந்தது. ஆனால் இந்த வருடம் பிப்ரவரி மாதம் அதிகபட்ச வெப்பநிலை 29.54 டிகிரி ஆக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு கோடையில் வெப்பம் கொளுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.