குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் பரைக்கர் (Ganesh Baraiya) என்ற இளைஞர், தனது 3 அடி உயரம் மற்றும் உடல் குறைபாடுகள் காரணமாக மருத்துவப் படிப்பில் சேர மறுக்கப்பட்டபோதும், சட்டப் போராட்டங்களைக் கடந்து இன்று மருத்துவராகச் (Doctor) சாதித்துள்ளார். குள்ளத்தன்மை (Dwarfism) காரணமாக 3 அடி மட்டுமே உயரம் கொண்ட கணேஷ், 72% குறைபாட்டுடன் உள்ளார்.
2018 ஆம் ஆண்டில், மருத்துவ கவுன்சில் ஆஃப் இந்தியா (MCI), அவரது உயரம் மற்றும் உடல் குறைபாடுகளைக் காரணம் காட்டி MBBS மருத்துவப் படிப்பில் சேர அனுமதி மறுத்தது.
View this post on Instagram
தனது மருத்துவக் கனவை விட்டுக்கொடுக்க விரும்பாத கணேஷ், குஜராத் உயர் நீதிமன்றம் வழியாகப் போராடினார். அங்கும் தோல்வியடைந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தை (Supreme Court) நாடினார்.
“உயரத்தைக் காரணமாகக் கூறி மருத்துவப் படிப்பில் சேர அனுமதி மறுக்கக் கூடாது” என்று உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பின் மூலம், 2019 இல் பவநகர் மருத்துவக் கல்லூரியில் அவருக்கு அனுமதி கிடைத்தது.
தனது படிப்பை முடித்து இன்று மருத்துவராகச் சேவை செய்து வரும் கணேஷ், “கிராமப்புற மக்களுக்கும், ஏழைகளுக்கும் சேவை செய்வதே எனது முதன்மை நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
