ஒருவாரம் முழுக்க அலுவலகப் பயணத்தில் இருந்த அப்பா வீட்டிற்கு திரும்பும் அந்த தருணம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி தானே? அதுவும் சிறிய பிள்ளைகள் தனிப்பட்ட காதல், பாசத்துடன் அப்பாவை வரவேற்கும் வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. @priyanka\_advi\_aadi என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது.
வீடியோவில், கதவைத் திறந்து அப்பா உள்ளே வரும்போது, இரண்டு குட்டி பசங்க, 1987ஆம் ஆண்டு வெளியாகிய சூப்பர்ஹிட் பாடலுக்கு செம்ம ஆட்டம் போட ஆரம்பித்தார்கள். அதைக் காணும் அப்பாவுக்கு மகிழ்ச்சி அடங்கவே இல்ல. பேக்கை சோபாவில் தூக்கிப் போட்டு, பசங்களுடன் சேர்ந்து ஆட ஆரம்பிக்கிறார். பின் இருவரையும் கட்டிப் பிடித்து அரவணைக்கும் காட்சி நெஞ்சை உருக்கும் அளவுக்கு இருக்கும்.
View this post on Instagram
இந்த வீடியோ தற்போது 30 லட்சம் பார்வைகள், 2.6 லட்சம் லைக்குகள் பெற்று, நெட்டிசன்களின் மனதில் “இது தான் ரியல் family goals!” அப்படின்னு பதிய வைத்துள்ளது. “இதுதான் வாழ்க்கை… பணம் இல்லாமலும்கூட சந்தோஷமா இருக்க முடியும்” என்ற கருத்துகள் குவிந்து வருகின்றன.
