செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக கூட்டணி முறிவு குறித்து ஏன் அமைதி காக்க வேண்டும்? இதில் அமைதியாக இருக்க என்ன இருக்கின்றது ? எங்களை பொறுத்தவரை 2024 எங்கள் கட்சியைச் சார்ந்த பிரதமர் மந்திரி வேட்பாளர். நரேந்திர மோடி அவர்களுக்கான தேர்தல். சிம்பிள். இது எங்களுடைய கல்யாணம்,  எங்களுக்கான தேர்தல். அந்த வேலையை நாங்கள் செய்ய போறோம். இன்னைக்கு ஆளுங்கட்சியாக திமுக இருக்கின்றது .

திமுக பத்தி நான் குறை சொல்லலாம். திமுக மக்கள் வரிப்பணத்தில் இங்கே இருக்கிறார்கள்.  மற்றபடி கூட்டணியின் தன்மை NDA என சொல்லி இருக்கிறேன். இன்னைக்கு NDAவில் யாரு இருக்காங்க. நாளைக்கு சில பேர் சேரலாம். ஆகவே NDA வலிமையாக இருக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி வலிமையாக இருக்க வேண்டும். 2024 பாராளுமன்றத் தேர்தலை பொருத்தவரை பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்களுக்கான தேர்தல் அவ்வளவு தான். இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு ?

இதற்கு ஒரே ஒரு தீர்வு  2024 ரிசல்ட் மட்டும் தான். ரிசல்ட் இல்லாம யாரு வேணாலும்,  என்ன வேணாலும் சொல்லலாம். யாரும் வளர்ச்சிக்கு யாரு தடையாக இருக்கிறார்கள் ? என்று கருத்து சொல்லலாம். பேச்சு  சொல்லலாம். கருத்தியல் அடிப்படையில் வைக்கலாம். பாரதிய ஜனதா கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனியாக போட்டியிட்டதால் தான் தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியா உருவாகி இருக்கு. அதனால 2024 தேர்தல் முடிவுகள் வரட்டும்.

தமிழக மக்கள் எல்லோருக்குமே தெரியும். மக்களுடைய ஆதரவு அன்பு எந்த பக்கம் இருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். அதனால் ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன். இது நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறை வரவேண்டும் என்பதற்கான தேர்தல். இந்த தேர்தல் முடிவுகள் நிச்சயமாக பாரதிய ஜனதா கட்சிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ஆதாரமாக தான் இருக்கும் என தெரிவித்தார்.