தமிழகத்தில் குடிமகன்கள் விரும்புவதால் டாஸ்மாக் மது கடைகளில் புதுப்புது ரகங்களை அறிமுகம் செய்கிறோம் என்று மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கோவில்களுக்கு அருகே உள்ள மதுக்கடைகள் பாதிப்பு இல்லாத இடங்களுக்கு மாற்றப்படுகின்றன. மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவது ஒரு சில இடங்களில் நடைபெறுகிறது.

சட்டவிரோதமாக பார்கள் செயல்பட்டால் மற்றும் மதுபானங்கள் விற்பனை செய்தால் சீல் வைக்கப்படும். ஒரே ராக மதுபானங்களை கொடுக்கும்போது ஏன் ஒரே ரகத்தை மட்டும் கொடுக்கிறீர்கள் மற்ற ரகம் தருவதில்லை, இதில் உள்நோக்கம் உள்ளதா என குடிமகன்கள் கேட்பதால் என்னென்ன ரகம் வருகிறதோ குடிமகன்கள் விரும்பும்போது கொடுக்கின்றோம்.அதே நேரம் மது பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றோம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.