ஓசூர் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில் விபத்து குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் பட்டாசு கடையின் பின்புறம் மற்றும் பின்புறம் என இரண்டு வழிகள் உள்ளது. இந்த நிலையில் கடையின் உரிமையாளர் பின்புறம் உள்ள கதவினை பூட்டி வைத்துள்ளார்.

அப்போது தீ விபத்து ஏற்பட்டவுடன் பணியாற்றி வந்த தொழிலாளிகள் தப்பித்து செல்வதற்காக பின்புறமாக சென்றபோது அந்த கதவு பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வெளியேற முடியாமல் பட்டாசு கடைக்குள்ளே சிக்கி உள்ளனர். இருந்த போதும் கடையின் முன்புறம் பணியாற்றி வந்த ஊழியர்கள் தப்பி வெளியே ஓடிள்ளனர். ஒருவேளை பட்டாசு கடையின் பின்புற கதவும் திறக்கப்பட்டு இருந்தால் உள்ளே பணியாற்றி வந்த ஊழியர்கள் உயிர்பிழைத்து இருப்பார்கள் என கூறப்படுகிறது.