செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  கிராமத்துல ஒரு ஊர்ல கொடி வைக்கிறீங்க .வேற வேற ஏரியாவுல அதற்கான அனுமதி முறை மாறும். கார்ப்பரேஷன் ஒரு மாதிரி இருக்கும்… கிராமத்தில் ஒரு மாதிரி இருக்கும்….  இப்ப கிராமத்துல பாத்தீங்கன்னா….  ஆல்ரெடி  கொடி கம்பங்கள் இருக்கிற இடத்துல….. கொடி கம்பம் வைக்கிறாங்க…..  கிராமத்தினுடைய சந்துல…. முட்டு சந்துல… மையப்பகுதியில்… கிராமத்தின் உடைய கலாச்சாரம்,  கல்ச்சர் வேலை… அந்த ஊரே கட்டுப்பாடு…..  ஊரே கூடி முடிவெடுத்து கொடி கம்பத்தை வைக்கிறாங்க…. அங்க வேற மாதிரி….  நகரத்துக்கு  வைக்கிறீங்கன்னா வேற மாதிரி….

சென்னையை பொறுத்த வரை ரொம்ப விசித்திரமா என்ன பண்ணி இருக்காங்கன்னா….. திமுக வந்த பிறகு புதிதாக கொடி கம்பம் நடுவதற்கு நாங்கள் அனுமதி கொடுக்க மாட்டோம். இது இந்தியாவிலேயே ரொம்ப விசித்திரம்… ஆல்ரெடி கொடி கம்பம் இருக்கா ?  அதை மாத்திக்கோங்க… ஆல்ரெடி கொடிக்கம்பம் இருக்கா அங்க பெரிய கொடி கம்பம் வச்சுக்கோங்க. ஆனால் ஆல்ரெடி கொடிக்கம்பங்கள் இருக்கக்கூடிய இடத்துல பாரதிய ஜனதா கட்சி ஒரு கொடி கம்பத்தை வைக்கணும்னா…

அனுமதி இல்லை… இது சர்வாதிகாரம்.. இதையெல்லாம் அந்தந்த இடத்துல பாத்துக்குவாங்க… சில இடத்துல கோர்ட்டுக்கு போக வேண்டி இருக்கும்… சில இடத்தில் கீழே பர்மிஷன்  வாங்கிப்பாங்க.. சில இடத்துல ஊர் கட்டுப்பாடுகள் இருக்கும்… ஊருக்குள்ள பேசி வாங்கணும்… எதாக இருந்தாலும் கூட பாரதிய ஜனதா கட்சி எப்பொழுதுமே சட்டத்திற்கு கட்டுப்பட்டது தான்.

அதனால் இதை பொருத்தவரை சில இடத்துல போலீஸ்ஸை   தூண்டி விடுவாங்க… உள்ள வருவாங்க… எல்லாத்தையும் தாண்டித்தான் கொடி கம்பங்கள் நட வேண்டும். இதை நான் ரெண்டு வருஷமா சொல்லிட்டு இருக்கேன். கொடிக்கம்பம் ஒரு கட்சியினுடைய வளர்ச்சிக்கு ரொம்ப முக்கியம். இன்னைக்கு வேகம் எடுத்து இருக்காங்க… குறிப்பாக இந்த சம்பவத்துக்கு பிறகு ஒவ்வொரு தொண்டனும் தன்னுடைய மானப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டுள்ளார்கள்  என தெரிவித்தார்.