வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர், ராஜஸ்தானின் பாரம்பரிய உணவான பஜ்ரா ரொட்டியை (கம்மஞ் சோள ரொட்டி) அதன் வடிவத்தை வைத்துச் சாதாரணச் சாப்பிடும் தட்டு (Plate) எனத் தவறாகப் புரிந்து கொண்டார்.
இதனால், உணவை அதில் வைப்பதற்கு முன்னதாகச் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அந்த ரொட்டியைத் தண்ணீரில் நனைத்துக் கழுவத் தொடங்கினார்.
विदेशी पर्यटक ने बाजरे की रोटी को प्लेट समझ कर धो दिया 🤣🤣🤦 pic.twitter.com/6EwmgaXGPF
— गुरुजी ( कलियुग वाले ) (@kaliyug_wale) December 17, 2025
இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தாலும், அவர் செய்த அந்தச் செயல் இப்போது இணையத்தில் பலரையும் சிரிக்க வைத்துள்ளது.
இந்த வேடிக்கையான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “பாவம், அந்த ரொட்டி தட்டு போல அவ்வளவு கெட்டியாக இருந்திருக்கும் போல” என்றும்,
“அவர் சுத்தமானவர் என்பதில் சந்தேகமே இல்லை, ஆனால் சாப்பாட்டையே கழுவிவிட்டாரே” என்றும் கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர். உணவு கலாச்சாரம் பற்றிய புரிதல் இல்லாததால் ஏற்பட்ட இந்தச் சிறு தவறு, தற்போது இணையத்தில் ஒரு பெரிய சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
