உத்தரப் பிரதேச மாநிலம் ஜாஃப்ராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனேஜா கிராமத்தில், ஒட்டுமொத்த மனிதநேயத்தையுமே உலுக்கும் வகையிலான ஒரு கொடூரமான குற்றச்சம்பவம் அரங்கேறியுள்ளது. உறவினர் வீட்டுத் திருமண விழாவிற்காகத் தனது தாயாருடன் வந்திருந்த 4 வயது சிறுமி, தாய் திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரெனக் காணாமல் போயுள்ளார். இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒட்டுமொத்த கிராமம் முழுவதும் விடிய விடியத் தேடியுள்ளனர்.
ஆனால், மறுநாள் அதிகாலையில் திருமண வீடு இருந்த இடத்தில் இருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் உள்ள புதருக்குள், அந்தப் பிஞ்சு சிறுமி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்ததாக சஹாப்லால் நிஷாத் (Sahablal Nishad) என்ற நபரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
G-Hadist Sahablal Nishad arrested for R@ping & Mu₹dering 4 year old girl who came for a relative wedding in Dhaneja village near Jafrabad police station area.
Girl missing while her mother was getting ready.
Family searched all night. In the morning her bl0od soaked body was… pic.twitter.com/KQPm0vo8pu
— Bhakt Prahlad🚩 (@RakeshKishore_l) June 30, 2026
ஒரு மங்கலமான திருமண விழா நடந்த இடத்தில், 4 வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த இந்த கொடூர அவலம் ஒட்டுமொத்த சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீயாய் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரக் குற்றத்தைச் செய்த மிருகத்திற்குச் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் கடுமையான ஆத்திரத்துடன் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
