தந்தையின் பாசத்திற்கு ஈடுஇணை ஏதுமில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு சிறுமி எதிர்பாராதவிதமாக சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இதைக் கண்டு பதறிப்போன அவரது தந்தை, ஒரு நொடி கூட யோசிக்காமல் தனது உயிரைப் பணையம் வைத்து, மகளைக் காப்பாற்றுவதற்காக அதே கிணற்றுக்குள் குதித்தார்.
மேலும் 60 அடி ஆழம் என்பது உயிருக்கே ஆபத்தான சூழல் என்ற போதிலும், மகளை மீட்க வேண்டும் என்ற அந்தத் தந்தையின் துணிச்சலும் வேகமும் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. கிணற்றுக்குள் விழுந்த தந்தை மற்றும் மகளைக் காப்பாற்ற அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து செயல்பட்டனர்.
बेटी बोरवेल में गिरी तो पिता ने भी लगा दी छलांग… यमराज से छीने अपनी लाडली के प्राण…#Gujarat #Borewell #BorewellHole #Chandlodiya #Chandlodia pic.twitter.com/kqFW4zMH3g
— Sambhava (@isambhava) December 17, 2025
“>
இந்நிலையில் கயிறுகள் கொண்டும் உள்ளூர் மக்களின் உதவியுடன் தந்தை, மகள் இருவரும் பத்திரமாக மேலே கொண்டு வரப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தந்தை தனது மகளைக் காக்க காட்டிய இந்த அசாத்திய துணிச்சல் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், அந்தத் தந்தையின் வீரத்தைப் பாராட்டி பலரும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
