சமூக வலைதளங்களில் தினமும் எத்தனையோ வீடியோக்கள் உலா வந்தாலும், சில வீடியோக்கள் மட்டுமே நம் மனதை அப்படியே உருகச் செய்து முகத்தில் பெரிய புன்னகையை வரவழைக்கும். அந்த வகையில், ஒரு குட்டிப் பாப்பா தனது மழலை மாறாத குரலில், பேரன்போடும் அழகான முகபாவனைகளோடும் “டெய்ன் டெய்ன் டோ டோ” (Tain Tain To To) என்ற பாடலைப் பாடும் கியூட் வீடியோ ஒன்று தற்போது இணையவாசிகளைத் மொத்தமாகக் காந்தம் போலக் கவர்ந்துள்ளது. அந்தப் பாப்பாவின் அளவற்ற தன்னம்பிக்கையும், பாடும்போது வெளிப்படுத்தும் கள்ளமில்லா எக்ஸ்பிரஷன்களும் பார்ப்பவர் நெஞ்சங்களை அள்ளிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

​மழலைக் குரலின் வசீகரத்திற்கு இருக்கும் பவரே தனி தான் என்பதை நிரூபிக்கும் வகையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ இதுவரை 157 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி, 10 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை அள்ளிக்குவித்து உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது. “சில நேரங்களில் மிகச் சிறிய குரல்கள் தான் நம் முகத்தில் மிகப்பெரிய புன்னகையை வரவழைக்கின்றன” என நெட்டிசன்கள் இந்த வாண்டுப் பாப்பாவைக் கொஞ்சித் தீர்த்து, வீடியோவைச் சமூக வலைதளங்களில் மரண மாஸாக வைரலாக்கி வருகின்றனர்.