DMK சார்பில் நடைபெற்று வரும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வால் அனிதாவில் ஆரம்பித்து,  ஜெகதீஸ்வரன் வரை இதுவரை 22 உயிர்கள் போய் இருக்கின்றது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல,  இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் இந்த தற்கொலை நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த தற்கொலைகளை நிறுத்த வேண்டும்.  அதற்கு நம் மாணவர்களுடைய கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து இயக்கத்தை துவங்கியிருக்கிறோம்.

இந்த கையெழுத்து இயக்கத்தை நான் மட்டும் துவங்க வில்லை. இங்கு இருக்கக்கூடிய அத்தனை பேரும்….   நீங்கள் ஒவ்வொருவரும் துவங்கியிருக்கிறீர்கள். எனவே இந்த கையெழுத்து  இயக்கத்தினுடைய வெற்றி உங்களுடைய வெற்றி… மாணவர்களுடைய வெற்றி… கல்வி உரிமை வெற்றி… நீட் வந்தால் தரமான டாக்டர்ஸ் கிடைப்பார் என்று சொன்னார்கள். மெடிக்கல் காலேஜில் பணம் வாங்கிட்டு சீட்டு கொடுக்க மாட்டாங்க  என்று சொன்னார்கள்.

ஆனால் இப்போ என்ன நடந்து கொண்டிருக்கிறது ? PG  மெடிக்கல் கோர்ஸ் படிக்க… PG நீட் தேர்வு எத்தனை %  எடுக்க வேண்டும் என்று தெரியுமா ? முட்டை எடுத்தால் போதும்,  டாக்டர் ஆகி விடலாம். முட்டை பர்சன்ட். பிஜி நீட் தேர்வில் முட்டை பிரசன்ட் வாங்கினாலே போதும் மெடிக்கல் காலேஜில் சேர்வதற்கு தகுதி என்று ஆர்டர் போட்டு உள்ளார்கள்.

சும்மா போயி நீட் தேர்வு எழுதி விட்டு வந்தாலே போதும்…. அப்புறம் பணம் கொடுத்து PG  மெடிக்கல் சீட்டு வாங்க முடியும். இதெல்லாம் எவ்வளவு பெரிய அயோக்கியது தனம், கேலிக்கூத்து. உலகத்தில் இந்த மாதிரி எங்கேயாவது நடந்தது உண்டா ? கொஞ்சம் நீங்க அத்தனை பேரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த மாதிரி நேரங்களில் தான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற  நம்முடைய தலைவர்களுடைய உழைப்பை நாம் நினைத்து பார்க்க வேண்டும். நமக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள், உழைத்திருப்பார்கள்… . அவர்களுடைய உழைப்பால் தான் தமிழ்நாடு இன்னைக்கு கல்வியிலும்,  சுகாதாரத்திலும் இவ்வளவு தூரம் முன்னேற்றி இருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும் என தெரிவித்தார்.