விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், போன தேர்தலில் எனக்கு 6 சீட் வேண்டாம். ஏனென்றால் எனக்கு  கலைஞர் இருந்தப்ப 10 தொகுதி தந்தார். நீங்க போய் 6 தொகுதி தாறீங்க. நாங்க இருக்க முடியாது அப்படின்னு நான் கோச்சிட்டு வெளிய வந்து இருந்தா…  நான் 100 தொகுதிகளில் கூட வேட்பாளராக உங்களை போட்டிருக்க முடியும். ஒரு ஆளு கூட உள்ள போயிருக்க முடியாது. ஒரு கூட்டணியிலேயே இணைந்து ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு,

நான்கு தொகுதியில் வெற்றி பெற்று,  இன்றைக்கு சட்டமன்றம் கூடும்போதெல்லாம் சிறுத்தைகளின் குரல் சட்டமன்றத்திலே ஒலிக்கிறது. இலட்சோப லட்சோப லட்சம் கணக்கான மக்களின் குரலாக அது ஒலிக்கிறது. நான்கு சிறுத்தைகளின் குரல் அல்ல. லட்சோப லட்ச கணக்கான மக்களின் குரல். சிறுத்தைகள் பேசினார்கள். ஊடகங்களில் விவாதிக்கின்றன.

சிறுத்தைகள் கோரிக்கை எழுப்பினார்கள்,  தொலைக்காட்சி விவாதங்களில் பொரி பறக்கின்றது, சூடு பறக்கிறது.  இது அதிகார பகிர்வு. ஆகவே இந்த இயக்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற கூடிய ஒரு பேரியக்கமாக வளர வேண்டுமா ? வலுப்பெற வேண்டுமா ? வேண்டாமா ? என்கின்ற கேள்வியோடு இந்த பயிற்சி  பட்டறை தொடங்குகின்றது. இதை நீங்களே நீங்கள் நெஞ்சிலே  நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.