
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். நடிகர் அஜித் பைக் ரைடில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது ஏகே மோட்டோ ரைடு என்ற பெயரில் புதிய பைக் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் பைக் சுற்றுப் பயணம் செல்ல விரும்புபவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் இது தொடர்பான அறிவிப்பை நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.
Discipline makes life easier#AKMOTORIDE pic.twitter.com/wf5kZHMVdt
— Suresh Chandra (@SureshChandraa) May 22, 2023