தமிழ் சினிமாவில் கடந்த 1977-ம் ஆண்டு வெளியான பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரத் பாபு. அதன் பிறகு தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் சரத் பாபு நடித்துள்ளார். நடிகர் ரஜினியுடன் சேர்ந்து முத்து மற்றும் அண்ணாமலை போன்ற படங்களில் நடித்துள்ள சரத் பாபு உடல்நல குறைவினால் சில மாதங்களாக ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது அவருக்கு வயது 72 ஆகும் நிலையில் நேற்று ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சரத்பாபுவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். என்னுடைய நெருங்கிய நண்பர் சரத்பாபுவை நான் இழந்தது ஈடு கட்ட முடியா இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என ரஜினி உருக்கமாக தெரிவித்துள்ளார்.