ஜப்பானில் தமிழ் திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாக வருடந்தோறும் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிறந்த தமிழ் நடிகர்-நடிகைகள், திரைப் படங்களை தேர்வு செய்து விருது வழங்குகின்றனர். கடந்த 2021-ல் வெளியாகிய தமிழ் படங்களுக்கு இப்போது விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சிறந்த நடிகர் விருது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த விஜய்கும் சிறந்த நடிகை விருது தலைவி படத்தில் நடித்த கங்கனா ரணாவத்துக்கும் வழங்கப்படுகிறது. இதுபோன்று சிறந்த டைரக்டர் விருது சார்பட்டா பரம்பரை படத்தை எடுத்த பா.ரஞ்சித்துக்கும் சிறந்த இசையமைப்பாளர் விருது யுவன் சங்கர் ராஜாவுக்கும் வழங்கப்படுகிறது.

சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை தேர்வாகி இருக்கிறது. சிறந்த திரைக் கதை விருதை மாநாடு திரைப்படத்துக்காக வெங்கட்பிரபு பெறுகிறார். அதேபோல் சிறந்த வில்லன் விருது மாஸ்டர் படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு வழங்கப்படுகிறது. சிறந்த துணை நடிகர், நடிகை விருது ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்த மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் போன்றோர் பெறுகின்றனர்.