சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, புதிய கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. இதில், ஒரு பெண்மணி, பணம் செலவு செய்யாமல், வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டு எளிதாக ட்ரைபாடு தயாரிக்கும் வித்தியாசமான முறையைக் காட்டியுள்ளார்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் aparajita.debnath.161 என்ற கணக்கில் பகிரப்பட்டு, ஆயிரக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டு, கமென்ட் பகுதியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த முறைக்கு எந்தவித பணமும் செலவாகாது, மேலும் வீட்டு சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களே இதற்கு போதுமானவை. இது புதிய கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், கன்டென்ட் கிரியேஷன் என்பது பலரது கனவாக மாறியுள்ளது. கல்லூரி மாணவர்கள் முதல் இல்லத்தரசிகள், வேலை பார்ப்பவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் தங்கள் திறமையைக் காட்ட விரும்புகின்றனர். ஆனால், கேமரா, ட்ரைபாடு, லைட்டிங் போன்ற விலையுயர்ந்த உபகரணங்களை வாங்குவது பலருக்கு சவாலாக உள்ளது.
இந்த வீடியோவில், பெண்மணி ஒரு சமையலறை கரண்டியை (பெரிய தோசை கரண்டி) எடுத்து, அதன் பின்புறத்தில் மொபைலை வைத்து, ரப்பர் பேண்ட் கொண்டு இறுக்கமாகக் கட்டுகிறார். பின்னர், அந்த கரண்டியை ஒரு காலி பிளாஸ்டிக் டப்பாவில் (பொதுவாக அரிசி அல்லது மாவு வைக்கப் பயன்படுத்தப்படும்) நட்டு வைக்கிறார். இதனால், மொபைல் நிலையாக நின்று, தெளிவான வீடியோவை எளிதாகப் பதிவு செய்ய முடிகிறது. இந்த எளிய, செலவில்லா முறை, புதிய கிரியேட்டர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
