சமூக வலைதளங்களில் ஒரு பெண் ஏசி ரயில் பெட்டியில் புகைபிடிக்கும் வீடியோ வைரலானது. வீடியோவில், அந்த பெண் மற்ற பயணிகளுடன் வாக்குவாதம் செய்வதைக் காணலாம். பயணிகள் அவரை வெளியே சென்று புகைபிடிக்குமாறு கேட்டபோது, அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர், ரயில் டிக்கெட் பரிசோதகர் தலையிட்டு, இந்திய ரயில்வே விதிகளை மீறியதற்காக அவரைக் கேள்வி கேட்டபோது, அந்த பெண் அழ ஆரம்பித்தார். ஒரு பயணி அவரை பெட்டியை விட்டு வெளியேறுமாறு கூறியபோது, கோபமடைந்த அவர், “நான் உங்கள் பணத்தில் புகைபிடிக்கவில்லை” என்று கூறி, வீடியோ எடுப்பதை நிறுத்துமாறு கேட்டார்.

இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு எக்ஸ் பயனர், “பொது போக்குவரத்து, தனிப்பட்ட இடமல்ல. மற்ற பயணிகளின் ஆரோக்கியமும் வசதியும் முக்கியம். இது பாலினம், சாக்குப்போக்கு அல்லது கண்ணீர் பற்றியது அல்ல, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பொது விதிகளை மதிப்பது பற்றியது. பெண் என்பதை எல்லா இடங்களிலும் காட்டக்கூடாது. அதிகாரிகள் இவருக்கு பொது அறிவை கற்பிக்க வேண்டும்” என்று பதிவிட்டார். மற்றொரு பயனர், “ரயிலில் புகைபிடிப்பது சட்டப்படி தடைசெய்யப்பட்டாலும், ஆண்கள் இதை அடிக்கடி செய்யும் போது இப்படி விமர்சிக்கப்படுவதில்லை. பாலின சமத்துவம் எங்கே?” என்று கேள்வி எழுப்பினார்.