கடந்த 2007 ஆம் வருடம் தனுஷ் நடிப்பில் வெளியாகிய பொல்லாதவன் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். இதையடுத்து ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கி தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

இதில் ஆடுகளம், விசாரணை, அசூரன் போன்ற படங்களுக்காக தேசிய விருதுகளையும் மாநில விருதுகளையும் பெற்றார். இப்போது நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்நிலையில் இவர் வி.சி.க தலைவரான திருமாவளவனை நேரில் சந்தித்து உள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.