செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், அனைவருக்கும் வணக்கம். முதலில் நேற்று எதோ சந்தனக்கட்டையை வெட்ட போனான்  என்று தமிழர்களை ஆந்திராவில் பிடித்து விட்டார்களே..  அது உண்மையா ? என்னை பெரிய ஹீரோ ஆக்கி விட்ட எல்லோருக்கும் நன்றி. முதலில் பரபரப்பாக தமிழ்நாடு வேலைவாய்ப்பு இழந்து…. ரொம்ப மோசமான நிலையில்…. ஆபத்தான நிலையில் இருக்கிறது.

10 நாள்… 11 நாளுக்கு முன்னாடி இதே இடத்தில் உங்களை  சந்தித்து நான் சொல்லிய நோக்கம், இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். பீகாரில் எடுத்துட்டார்கள். தமிழ்நாட்டில் உடனடியாக பண்ண வேண்டும். வெறும் 300 கோடி பணமும்,  3000 ஆசிரியரும் இருந்தால் போதும் ஒன்றரை மாசத்தில் எடுத்து விடலாம்.

மிகப்பெரிய அநீதி நடந்து கொண்டிருக்கிறது. அதன் பிறகு யார்கிட்டயும் இட ஒதுக்கீடு கேட்டு தொங்க தேவையில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டால்,  அந்தந்த விகிதாச்சாரப்படி எல்லோருக்கும் வேலை கிடைக்கும்….  மக்களை பார்த்து நான் சொல்லுகிறேன்….  எவனை நீங்கள் பணிய வைக்க தேவையில்லை….. இட ஒதுக்கீடு அத்தனை கொடு, இத்தனை கொடு என்று எவனிடமும் மண்டியிட தேவையில்லை.

கணக்கீடு எடுக்கப்பட்டு விட்டால்,  இந்த மக்களுக்கு இதுதான்…  குழந்தைகளை நல்லா படிக்க வையுங்க… சட்டை காலரைப் பிடிக்க அந்தந்த பதவியில் உட்கார வைக்க முடியும்.ஜாதிவாரி கணக்கெடுப்பு படி அதிகமாக வேலை வாய்ப்பை அனுபவித்துக்கொண்டு வருபவர்களை விகிதாசாரப்படி, மண்டையில் அடிச்சி,

வி.ஆர்.எஸ் கொடுத்து வெளியேற்றிவிடனும். அது தான் கிளீன் இந்தியாஅதுதான் உண்மையான சுத்தகரிக்கப்பட்ட இந்தியா….  அதற்காகத்தான் நான் போராடினேன். அது எல்லாம் மறைத்துவிட்டு,  கட் பண்ணி ஒரு வீடியோ போடுகிறார்கள். இங்கு பேசியதுதான்….  ஒரு சகோதரர் வைரமுத்து வைத்து… இந்த திசையில் இருந்து வந்தது என தெரிவித்தார்.