பிரபல இந்தி நடிகை வித்யா பாலன் பல இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தி நடிகை சில்க் ஸ்மிதாவின் The Dirty Picture’ படத்தில் நடித்து, அதற்காக தேசிய விருதும் பெற்றார். ஆனால் அவருக்கும் பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. உடல் பருமனாக இருப்பதே காரணம் என்று பலர் கூறினர்.

இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைக்க பலர் அறிவுறுத்தியதாக கூறிய வித்யாபாலன், ஒல்லியாக இருப்பவர்கள் மட்டுமே அழகானவர்கள் இல்லை, நடிகை ஆவதற்கு அழகு மட்டுமே முக்கியமில்லை என தெரிவித்தார்.