சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணம், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் ஜோடிகளை சட்டப்படி குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கிறது. சிச்சுவானில் பிறப்பு விகிதமானது குறைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அதிகாரிகள் இந்த புதிய முடிவை எடுத்துள்ளனர்.

திருமணமான தம்பதிகளுக்கு இணையாக அவர்களுக்கும் காப்பீடு, மகப்பேறு விடுப்பின்போது சம்பளம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.