உக்ரைனில் போர் தொடங்கும் முன் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ரஷ்யா அதிபர் புதின் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்று பிபிசி ஆவணப்படம் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சியில் உக்கிரன் ஈடுபட்டது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு தீர்வு ஏற்படுவதற்கு ரஷ்யா போர் யுக்தியை கையில் எடுத்தது. இதன் ஒரு பகுதியாக உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலான போரை ரஷ்யா தொடுத்துள்ளது.

போர் தொடங்குவதற்கு முன் உக்ரைனுக்கு உதவும் வகையிலும் அதே சமயம் ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்தும் வகையிலும் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கீவ் நகருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஜான்சனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது போல் அந்த ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ளது.