கடந்த 2002ல் அமீர் இயக்கிய மெளனம் பேசியதே படம் தான் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் திரைப்படம். இதையடுத்து கில்லி, திருப்பாச்சி, ஆறு என பல ஹிட் திரைப்படங்களில் நடித்தார். அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகிய முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார் த்ரிஷா. இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன்-2, சதுரங்க வேட்டை-2, ராம் (மலையாளம்) போன்ற படங்கள் அடுத்து வெளிவரவுள்ளது.

இவர் நடிக்கும் புது இணையத் தொடர் படப்பிடிப்பு முடிந்ததாக அண்மையில் தெரிவித்திருந்தார். அறிமுக டைரக்டர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகும் தி ரோட் திரைப்படத்தில் நாயகியாக நடிக்கிறார் த்ரிஷா. மேலும் விஜய்யின் “லியோ” படத்தின் புரோமோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் விஜய்க்கு மட்டுமின்றி த்ரிஷாவுக்கும் 67-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 14 ஆண்டுகளுக்கு பின் விஜய்யுடன் இணையும் படத்தில் இந்த 67 என்ற எண் சிறப்பு வாய்ந்ததாக இருப்பதை த்ரிஷாவின் ரசிகர்கள் “டபுள் ட்ரீட்” என  கொண்டாடி வருகின்றனர்.