தளபதி விஜய்யின் 67-வது திரைப்படமாக லியோ உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், ப்ரியா ஆனந்த் என பல நட்சத்திர பட்டாளமே நடிக்க இருக்கின்றனர். லியோ படத்தின் அடுத்தகட்ட சூட்டிங்காக படக்குழு காஷ்மீரில் முகாமிட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டு தேதியின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் லியோ படத்தின் புரோமோ பல்வேறு படங்களில் இருந்து காப்பி அடித்து எடுக்கப்பட்டு இருப்பதாக பலரும் மீம்ஸ் போட்டு கேலி செய்து வருகின்றனர். மேலும் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் புரோமோவில் இருந்த ஒரு காட்சியும் லியோ புரோமோவில் இடம்பெற்றுள்ளது. அதோடு ஹாலிவுட்டில் வெளியாகிய அயன் மேன் உள்ளிட்ட சில படங்களில் இருந்தும் காட்சிகள் காப்பியடிக்கப்பட்டு இருப்பதாக கூறும் நெட்டிசன்கள், அது குறித்த புகைப்படங்களையும் வைரலாக்கி வருகின்றனர்.