தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் தெலுங்கில் கதாநாயகியாக நடித்திருக்கும் “தசரா” திரைப்படம் நாளை 30ம் தேதி பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக நானியுடன் கீர்த்தி நடிக்கும் 2-வது படம் இது.

இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமான உடனேயே இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா, கீர்த்தியை ஒல்லியாக மாறவேண்டும் என்று கூறிவிட்டாராம். அதன்படி 12 கிலோ வரை தனது உடல் எடையைக் குறைத்துள்ளார் கீர்த்தி. ஆகவே திடீரென்று அவர் ஒல்லியாக மாற இதுதான் காரணம். இதையடுத்து வேதாளம் படத்தின் தமிழ் ரீமேக்கான ‘போலா சங்கர்” திரைப்படத்தில் சிரஞ்சீவி தங்கையாக நடித்து வருகிறார் கீர்த்தி.