கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  இன்றைக்கு தொலைக்காட்சியிலே பார்க்கிறோம்…. ஊடகத்தில் பார்க்கிறோம்… பத்திரிக்கையில் பார்க்கிறோம்…..

இன்றைக்கு தலைமை செயலாளர்  சிப் செகரட்டரி சொல்றாரு…. 600 போட் விட்டோம் என்று சொல்கிறார். ஒரு போட்டு கூட அங்க வரல. அங்க இருக்குற மக்கள் எல்லாம் தண்ணீரில் தத்தளிச்சிட்டு இருக்காங்க வீட்டுல…… அங்கிருந்து வெளியே வர முடியல…. இந்த காட்சி தான் பார்க்கிறோம்….. ஊடகத்திலும்  பார்த்துட்டு தான் வந்தாங்க… நேரடியா பாத்துட்டு தான் வந்தாங்க…..

அங்க இருக்கின்ற மக்கள் எங்களிடத்தில் தெரிவித்தது…. மூன்று நாட்களாக சாப்பிட்டு,  இன்னும் உணவு கிடைக்கவில்லை…. எந்த அதிகாரியும்  வந்து பார்க்கவில்லை…. எந்த அமைச்சரும் பார்க்கவில்லை என்று சொல்கிறார்கள்…. ஆனால் ஊடகத்தில் எல்லாம் அமைச்சரும் அழகா பேட்டி கொடுக்குறாங்க… நாங்க போய் மக்களை பார்த்தோம்.

மக்களுக்கு தேவையான முதற்கட்ட பணிகள் எல்லாம் செய்தோம். உணவு கொடுத்தோம்… தண்ணி கொடுத்தோம்…. மருத்துவ சிகிச்சை செய்தோம்…. அங்கே முகாமில் தங்க வைத்தோம் என்று பச்சை பொய்யை பேசுகின்றது வன்மையாக கண்டிக்கிறது. இது போர்க்கால அடிப்படையிலேயே வேகமாக… துரிதமாக…   மக்களின் பிரச்சனையை கவனத்தில் எடுத்துக் கொண்டு…..  உணவை இனியாவது மக்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் இந்த அரசு….. அதோடு குழந்தைகளுக்கு தேவையான பால் பாக்கெட் கொடுக்க வேண்டும்…… பால் பவுடராவது கொடுக்க வேண்டும்…. குடிதண்ணீர் கொடுக்க வேண்டும்.