மத்திய பிரதேச மாநிலத்தில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை நேற்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதன் பிறகு பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு என்னுடைய நற்பெயரை கெடுப்பதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிலர் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் என்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என அப்பட்டமாகவே செயல்படுகிறார்கள்.

ஆனால் தற்போது ஒவ்வொரு இந்தியரும் மோடிக்கு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறார்கள் என்று கூறினார். மேலும் இந்திய ஜனநாயகம் குறித்தும் ஆட்சி குறித்தும் ராகுல் காந்தி வெளிநாட்டில் அவதூறாக பேசியதாக பாஜகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தன்னுடைய நற்பெயரை கெடுக்க சிலர் முயற்சி செய்கிறார்கள் என ராகுல் காந்தியை தான் பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக தாக்கி பேசியதாக கூறப்படுகிறது.