அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் சார்பாக இயக்கப்பட்டு வரும் 15 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்திய வாகனங்களை ஸ்க்ராப்பிங் முறையில் அகற்றவேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இப்போது வரையிலும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பாக 1,600-க்கும் அதிகமான பேருந்துகள் 15 வருடங்களை கடந்து இயக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் ஸ்க்ராபிக் முறையில் காலாவதியான வாகனங்களை அகற்றும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், கால அவகாசத்தை 5 ஆண்டுகள் நீடிக்குமாறு தமிழ்நாடு போக்குவரத்துத்துறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதிலும் குறிப்பாக போக்குவரத்துத்துறை, மருத்துவத்துறை, காவல்துறை உள்ளிட்ட வாகனங்களுக்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.