கேரள மாநிலத்தில் கடந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஏப்ரல் 1-ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. கேரளாவில் பெட்ரோல் லிட்டருக்கு 109 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 98 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 103.87 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 98 ஆகவும் இருக்கிறது. இதன் காரணமாக தமிழக கேரள எல்லை பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாறசாலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கேரள வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்குக்கு வந்து பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பி செல்கிறார்கள். மேலும் பெட்ரோல், டீசல் விலை சாதாரண மக்களை பெரிதும் பாதிப்பதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.