NSC திட்டத்தில் 3 பெரியவர்கள் வரையிலும் கூட்டாக சேர்ந்து கணக்கை திறந்துக்கொள்ளலாம். 10 வயதுக்கு அதிகமான மைனர்கள் (அ) மனநிலை சரியில்லாதவர்கள் பாதுகாவலர் உதவியோடு சொந்த பெயரில் கணக்கை துவங்கி கொள்ளலாம். 01/04/2023 முதல் என்எஸ்சி திட்டத்திற்கான வட்டி விகிதம் வருடந்தோறும் கூட்டுத் தொகையாக 7.7% வரை வழங்கப்படுகிறது.

இவை முதிர்ச்சியின் போது செலுத்தப்படும். என்எஸ்சி எனப்படும் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில்  கணக்கை தொடங்குவதற்கு குறைந்தபட்சம் தொகையாக ரூ.1000 செலுத்தவேண்டும் மற்றும் இதில் அதிகபட்ச வரம்பில்லை.தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் நீங்கள் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் துவங்கிக்கொள்ளலாம். இதில் உள்ள டெபாசிட்டுகளுக்கு 80சி பிரிவின் கீழ் வரிவிலக்கு வழங்கப்படுகிறது. என்எஸ்சி சேமிப்புத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய துவங்கிய நாளில் இருந்து 5 வருடங்கள் முடிவடைந்ததும் உங்கள் கணக்கு முதிர்ச்சியடையும்.